போருக்காக தாக்குதல் விமானங்களை இறக்குமதி செய்ததில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்ட கருத்தால், ஏற்பட்டுள்ள அவபெயருக்கு எதிராக இழப்பீடு கோரி, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து அங்கு பேசிய அவர்,
கோத்தபாய மீதான பீதி காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு கதைகளை கூறி வருகிறார்.
எக்நேலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களை விளக்கமறியலில் வைத்து கொண்டு, அந்த குற்றத்தையும் கோத்தபாய மீது சுமத்த முயற்சித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள இராணுவத்தினர் எப்போதும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எதனையும் கூறமாட்டார்கள்.
அதேபோல், போரில் முக்கால்வாசியை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கால்வாசியையே மகிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்தாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கொழும்பில் முக்கால்வாசியை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், முழுவதுமாக முடிக்க போகும், சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச புலிகளை முற்றாக தோற்கடித்தார்.
மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள விக்ரமபாகு கருணாரட்னவை கைது செய்ய வேண்டும் என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

