பலத்த காற்றினால் ஏறாவுரில் மின் கம்பி தீப் பற்றியது



(EVR ASMY)
தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக மின்சார கம்பிகளின் உராய்வினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று பகல் ஏறாவூர் மிச்நகர் ஹுதா பள்ளி வீதியில் இடம் பெற்றுள்ளது.
காற்று காரணமாக மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில் கிளம்பிய தீப்பொறிகள் அருகில் இருந்த பனை மரங்களில் வீழந்து தீப்பற்றிக் கொண்டதால் பாரிய தீ அருகருகே இருந்த பனை மரங்களின் ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் தீயை அணைக்கும் முயற்சியில் பிரதேச மக்களும் அதிக பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தீ விபத்து காரணமாக பனை மரங்களுக்கு கீழே நிழலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட அரச ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முழுமையாக தீக்கிரையாகி உள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொரப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் அவர்கள் தலைமையிலான பொலிஸ் குழு மேற் கொண்டு வருகின்றது..
தீப் பிடிப்பு சம்பவம் தொடர்பில் கேள்விப் பட்ட உடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சுபைர் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள செயற்பாடகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது...

(பட உதவி நஸீர் ஹாஜி)