(க.கிஷாந்தன்)
அட்டன் நகரில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் முகமாக 28.08.2016 அன்று அட்டன் புகையிரத களைஞ்சியசாலை பகுதியில் கடைதொகுதிகளை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல்லை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நாட்டி வைக்கப்பட்டது.
இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் முதல் கட்டமாக 100 மில்லியன் ரூபாவிலும், இரண்டாம் கட்டமாக 350 ரூபா மில்லியன் ரூபா செலவிலும் வாகன தரிப்பிடம், நடைபாதை மேடை, சிறப்பு வியாபார கட்டிடத் தொகுதி, சொகுசு உணவகம், சுற்றுலா விடுதி என அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, எம்.திலகராஜ், உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம்.உதயகுமார், சிங் பொன்னையா உள்ளிட்ட மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பிலிப் மற்றும் முன்னாள் நகர சபை தலைவர், உறுப்பினர்கள் என பல அதிகாரிகளும், பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

