(க.கிஷாந்தன்)
டிக்கோயா - தரவளை பகுதியில், துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட் டதாக கூறப்படும் 13 வயது சிறுமி தொடர்பில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களை எதிர்வரும் 06.09.2016 அன்று வரை சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கும்படி அட்டன் நீதவான் பிரதீப் லியனகே உத்திரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களை அட்டன் பொலிஸார் 29.09.2016 அன்று மாலை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த பொழுது இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

