#RIO வில் போட்டி போட்டு தங்கம் வென்ற பிரிட்டன் காதல் ஜோடி





ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், பிரிட்டன் சைக்கிள் பந்தய வீரர் ஜேசன் கென்னி, ஆண்கள் கெய்ரின் சைக்கிள் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தனது ஆறாவது ஒலிம்பிக் தங்க பதக்கத்தை பெற்றுள்ளார். இதன் மூலம், தனது நாட்டை சேர்ந்த கிறிஸ் ஹோயின் ஒட்டுமொத்த சாதனையை சமன் செய்துள்ளார்.
டிராக் கைக்கிள் போட்டியில், பலவித போட்டிகள் அடங்கிய ஆம்னியம் போட்டியில் வென்றதன் மூலம், ரியோ போட்டிகளில், தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை பிரிட்டனின் லாரா டிராட் வென்றுள்ளார்.
ஆம்னியம் போட்டியில், இது வரை நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள டிராட், பிரிட்டனின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.
லாரா டிராட் மற்றும் ஜேசன் கென்னி முக்கிய இருவரும் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
சைக்கிள் பிரிவு போட்டிகளில் இவர்கள் இருவரும் வென்றுள்ள வரலாற்று புகழ் பெற்ற தங்கப் பதக்கங்களையும் சேர்த்து, இது வரை வெளிநாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ரியோ ஒலிம்பிக்கில் தான் பிரிட்டன் அதிக பதக்கங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், பிரிட்டன் இது வரை 50 பதக்கங்கள் பெற்றுள்ளது.
குத்துச்சண்டை பிரிவில் பிரேசிலின் முதல் தங்கப் பதக்கத்தை ரோப்சன் கான்சேசாவ் வென்றுள்ளார்.
ஆண்கள் இலகுரக (குறைந்த எடை) பிரிவு இறுதி போட்டியில், பிரான்சின் சோஃபைன் உமிஹாவை ராப்சன் தோற்கடித்தார்.
தடகள மைதானத்தில், ஜமைக்காவின் ஆண்கள் 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த பிரிவு போட்டியில், ஜமைக்காவின் சார்பாக வெல்லும் முதல் நபர் ஒமர் தான்.