பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 96 பேரில் 23 பேரை புனர்வாழ்வளிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த 23 பேரையும் விடுதலை செய்வதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்படி விடுதலை செய்யப்பட உள்ள 23பேரின் பெயர் விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

