120 மில்லியன் ரூபா அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று சானுக உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

