அக்கரைப்பற்று (தேசிய பாடசாலை) முகாமைத்துவ சபையின் மறுப்பறிக்கை




(ST.Jamaldeen)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முகாமைத்து வ சபையின்        மறுப்பறிக்கை:

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் தொடர்பாக இம்மாதம் 6ஆம்இ 7ஆம் திகதிகளில் இணையத்தளங்கள் (சிலோன்24 அல்ல) மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி முகாமைத்துவ சபை தெரிவிக்கின்றது.

உண்மைக்குப் புறம்பான அன்றைய செய்தி தொடர்பாக முகாமைத்துவ சபை கடந்த8ஆம் திகதி கல்லூரியில் கூடி ஆராய்ந்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

எனவே, இவ்வாறான விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பாடசாலை நன்மைகருதி இவ்விடயங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென முகாமைத்துவ சபை கேட்டுக்கொள்கின்றது.


முகாமைத்துவ சபை
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி
 (தேசிய பாடசாலை)