(பின்ணிணைப்பு)
இந்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பு ரயிலில் பயணம் செய்த வேளையில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(முந்தைய செய்தி)
காணாமற்போன சம்பவமொன்று திருகோணமலை உப்புவெளி பகுதியில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர்.
9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் காணாமந்போயுள்ள சிறுவனால் எழுதப்பட்டது என கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் , குறித்த இருவரினதும் ஆடைகளும் வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

