பட்டிருப்பில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயம்



மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேசத்தில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினுடைய ஆணையாளர் திருமதி சிவசங்கர் சுதஸ்னர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சிறுவர் நன்னடத்தைகள் அமைச்சர் A.L.M. மொகமட் நசீர், மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, கி.துரைரெட்ணம், மா.நடராஜா நன்னடத்தைகள் திணைக்களத்தினுடைய பிரதி ஆணையாளர் சரண்யா சுதர்சன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பிரதேசமக்கள் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாணசபையினுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட இவ் நன்னடத்ததைக் காரியலயம் உள்ளடங்கலாக 13 காரியாலயங்கள் கிழக்கு மாகாணத்திலே இயங்கி வருகின்றமை விசேட அம்சமாகும்.