அக்கரைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரி தேசியமட்டபோட்டிக்குத் தெரிவு



அக்கரைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரி "ஈகோன் ஐகோன்" தேசியமட்டபோட்டிக்குத் தெரிவு

-எஸ்.ரி.ஜமால்டீன்-

இலங்கைமத்தியவங்கிமற்றும் சக்திதொலைகாட்சிசேவையின் உற்பத்திப் பிரிவினரால் நடாத்தப்படும் பாடசாலைகளுக்கிடையிலான ”ஈகோன் ஐகோன்|தேசியமட்டவினாடி வினாபோட்டியில் கலந்துகொள்வதற்குஅம்பாறைமாவட்டத்திலிருந்துஅக்கரைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரி (தேசியபாடசாலை) மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் எனகல்லூரி அதிபர்,எம்.எம்.எம் மீராசாஹிப் தெரிவித்தார்.
இக்கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (16.09.2016)இரத்மலானை,பொருபனைவீதி, 2ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ளசக்தி ஸ்ரேய்ன் கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் எம்.என். அசீப் அஹ்மட், எஸ்.அஹ்மட் நுஸ்கி,எம்.ஏ.சுஹாத் அஹ்மட், எஸ்.ஏஸ்.விஜாஸ் அஹ்மட்,எம்.ஏ.பைசுல் ஹைய் ஆகிய மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்எ னவும் அதிபர்தெரிவித்தார்.

இப்போட்டிக்குதேசியமட்டத்தில் 16 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,  வெள்ளிக்கிழமைநடைபெறும் போட்டியில் 08 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இப்போட்டிகள் இன்று (15)ஆரம்பமாகி நடைபெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் க.பொ.த. உயர்தரவகுப்பில் பொருளியலை ஒரு பாடமாக கற்கின்றமாணவர்களிலிருந்து எழுத்துப் பரீட்சை பெறுபேறுகளின் மூலமாக மாவட்டஅடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.