வேதனத்தில் தோல்வியைத் தழுவும் தோட்டத் தொழிலாளர்கள்




பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று கொழும்பில் 9வது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

கடந்த வருடம் மார்ச் 31ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியதையடுத்து சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. 

இதன் 9வது கட்ட பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று கொழும்பில் இடம்பெற்ற போது தோட்ட தொழிலாளர்கள் அபிலாஷைகளுடன் வானொளிகளில் மற்றும் தொலைக்காட்சிகளில் நல்ல பதில் கிடைக்கும் என எண்ணத்துடன் காத்திருந்த தொழிலாளர்களுக்கு எவ்வித நல்ல பதிலும் இல்லாமல் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக தொழிலாளர்கள் அங்கலாகின்றனர். 

அடுத்த மாதம் 29ம திகதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் இவர்கள் தற்பொழுது தோட்ட நிர்வாகம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் வழங்குவதாகவும், இதனால் தீபாவிள பண்டிகையை கொண்டாடுவதில் பெல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

மலையக தொழிற்சங்கங்கள், தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுடன் கலந்து கொள்ளவில்லை என இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் புலப்படுவதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

எனவே மலையக தோட்ட தொழிற்சங்க அதிகாரிகள் தங்களின் கட்சியை வளர்ப்பதற்கும் சுய இலாபத்திற்காகவும், தொழிலாளர்களை பகட காய்களாக கருதாமல் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கம் செயற்படும் என உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டு சம்பள அதிகரிப்பை பெற்றுத்தர வேண்டும் என தொழிலாளர்கள் கோருகின்றனர்.