மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.
நேற்று காலை கொழும்புக்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த புகையிரதத்தின் பின்னால், மற்றைய புகையிரதத்தின் எஞ்சின் மோதியுள்ளது.
இதனால் புகையிரதப் பெட்டி ஒன்று சேதமடைந்ததுடன் எஞ்சின் ஒன்றும், புகையிரதப் பாதையிலிருந்து தடம் புரண்டு புகையிரதப் பாதையும் சேதமடைந்தது.
இதனால் நேற்று காலை 10.15 மணிக்கு மாகோவுக்குச் செல்லும் புகையிரதம் இடை நிறுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் கொழும்புக்குச் செல்லும் புகையிரதங்கள் ஏறாவூர் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்குச் சென்றது.

