கல்முனையில் நன்னீர் மீன்களை உணவுக்காக ஊக்குவித்தல்



[ ரவிப்ரியா ]       
கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில், கிழக்கு மாகாண மின்பிடி திணைக்களத்தின் விசேட செயற்திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்ட நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்;எம். இம்தியாஸ் எற்பாட்டில், பாடசாலை
மட்டத்தில் நன்னீர் மீன்கனை உணவுக்கு சேர்த்துக் கொள்வதை  ஊக்குவிக்கும் முகமாக. முதற் தடவையாக, செயலமர்வு ஒன்று வியாழனன்று அதிபர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

மின்பிடி மாகாண திணைக்கள பணிப்பாளர் எஸ் சுதாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.கலையரசன் உட்பட மனையியல்  ஆசிரியைகளும், மாணவர்களும் கலந்து கொண்ட பாடசாலையின் மனையியல் பிரிவினரால் நன்னீர் மீன்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகள், காட்சிப்படுத்ப்பட்டதுடன், மாணவர்களுக்கு அவை அதிகளால்; வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

இத்தகைய செயலமர்வுகள் அம்பாரை மாவட்டத்தில் மேலும் இரு முஸ்லிம், மற்றும் சிங்கள பாடசாலைகளில் நடாத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இச் செயலமர்வு மிகக் குறுகிய காலத்துள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள போதும், பாடசாலை நிர்வாகத்தின் சிறந்த ஒத்துழைப்பால்; வெற்றி பெற்றுள்ளதாகவும் மாகாண பணிப்பாளர் எஸ.சுதாகரன் தெரிவித்தார். கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இத்தகைய செயலமர்வு இடம்பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில் தொற்றா நோய்கள் அதிகரித்து செல்வதற்கு எமது உணவு பழக்க வழக்கங்களே காரணமாக அமைகின்றது. இந்நிலையில் உடலுக்கு எந்தவித பாதிப்பையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத நன்னீர் மின் பாவனையை ஊக்குவிக்கும் இந்தச் செயற்பாடு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.