கர்ப்பிணித்தாய் பரிதாபமாக மரணம்



மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை, ஜெயந்தியாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணித்தாய் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணித்தாயை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியும் பொலன்னறுவை பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மரணமடைந்த சேனபுரயைச் சேர்ந்த கர்ப்பிணித்தாயான ஹயாத்து முகம்மது பௌசியா (வயது – 35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருடன் பயணம் செய்த சேனபுரையைச் சேர்ந்த முஹம்மது சாலி பௌசியா (வயது – 43) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், முச்சக்கர வண்டியின் சாரதியான செயினால்ப்தீன் முகம்மது அசனார் (வயது – 36) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்.