இலங்கையை மத்திய நிலையமாக மாற்றுவதே எமது நோக்கம்:



கடல், வான், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலத்தில் கடல்துறை சார்ந்த வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கை இருந்து வந்தது.
இலங்கையை பொறுத்தவரை பூகோள அமைவு கடற்துறை சார்ந்த வர்த்தகத்துக்கு மாத்திரமல்ல, வான்துறை செயற்பாடுகளிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.
புவியியல் அமைவினை போன்றே இலங்கையில் சிறந்த மனித வளமும் உள்ளது. இவற்றை மையப்படுத்தி சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.
எனவே அதற்கான பௌதீக வளத்தை மேம்படுத்தி இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.