அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடுவெல – மாலபே பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பெண்களை வலுவூட்டும் திட்டமொன்றின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
பெண்களுக்கான சுயதொழில் பயிற்சியை வழங்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

