ஐ.நா அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்



இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு நேற்று விஜயம் செய்தார். 

இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள செயற்பாடுகளுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குண்டு தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களின் படங்களை காட்சிப்படுத்தியவாறு, "ஐக்கிய நாடுகள் சபையே எங்கிருந்தாய்" என்ற கோஷங்களையும் இவர்கள் எழுப்பினர். 

இராவணா பலகாய என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள், பான் கீ மூனிடம் கையளிக்குமாறு கோரி, மகஜர் ஒன்றையும் ஐ.நா அலுவலகத்தில் கையளித்தனர்.