இலங்கையில், மத்திய மாகாண சபையினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே நியமனம் பெற்றுள்ளனர்.
இந்நியமனம் மலையக பாடசாலைகளில் குறித்த காணப்படும் குறித்த பாடங்களுக்கான ஆசிரியர் தேவையில் , ஒரு சதவீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை என மத்திய மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மத்திய மாகாண சபையினால் பத்திரிகை அறிவித்தல் மூலம், இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
550 பேர் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
இந்நியமனம் பெற்றுள்ள தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 10 - தொடக்கம் 15 பேரில் இரண்டு பேர் மட்டுமே தமிழர்கள் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரான கணபதி கனகராஜ் கூறினார்.
தமிழ் மொழி மூலம் தேர்வான ஏனைய ஆசிரியர்கள் முஸ்லிம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களிடமிருந்து போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பம் செய்த தமிழ் விண்ணப்பதாரிகள் பலருக்கு அது பற்றிய அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றார் கணபதி கனகராஜ்.
இந்நியமனம் குறித்து மத்திய மாகாண சபையிலுள்ள தமிழ் உறுப்பினர்கள், மாகாண சபையிலும், கல்வி அமைச்சரான மாகாண முதலமைச்சரிடமும் தங்களின் யை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மத்திய மாகாண சபை உறுப்பினரான கணபதி கனகராஜ் ''அடுத்த சில வாரங்களில் கலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
அதன் போது தமிழ் மொழி மூல கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என முதலமைச்சரால் தங்களுக்கு உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது '' என்று தெரிவித்தார்.

