இந்தியாவில் ஐபோன்களின் விலையை குறைத்த அப்பிள்




இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை மந்தமாக உள்ளதால் ஐ போன் 6 எஸ் (iPhone 6s) மற்றும் ஐ போன் 6 எஸ் பிளஸ் (iPhone 6s plus) ஆகியவற்றின் விலையை 22 ஆயிரம் இந்திய ரூபா வரை அப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு மூலம் 82,000 ஆயிரம் இந்திய ரூபா விலையுள்ள ஐ போன் 6 எஸ் இனை 60,000 இந்திய ரூபாவிற்கு இந்தியாவில் வாங்க முடியும்.
இதேபோல், 22,000 இந்திய ரூபா குறைக்கப்பட்டு ஐபோன் 6 எஸ் பிளஸ், 70,000 இந்திய ரூபாவிற்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 4-இன்ச் ஐ போன் SE போன்களின் விலையையும் அப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
49,000 விலையுள்ள இந்த போன் இனி 44,000 இந்திய ரூபாவிற்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பு புதிதாக அப்பிள் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.