ஏறாவூரில் தாயும் மகளும் கொலை



மட்டக்களப்பு - ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதியில் வசித்து வந்த தாயும் மகளும் சனிக்கிழமை (10) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். 

வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்களே இக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன