மறைந்த அதிபர் இஸ்லாம் கரிமோஃபுக்கு மக்கள் இறுதி பிரியாவிடை



நாட்டை 27 ஆண்டுகளாக வழிநடத்திய அதிபர் இஸ்லாம் கரிமோஃபின் இறுதிச் சடங்கின் சவ ஊர்வலத்திற்காக உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கென்ட் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக கூடியுள்ளனர்.

அதிபரின் உடலை கொண்டு சென்ற மோட்டார் வாகனப் பவனி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சிலர் மலர்களை தூவி வழியனுப்பினர்.
சிறு வயதில் சம்மார்கன்ட் என்ற இடத்திலுள்ள அனாதை இல்லத்தில் வளர்ந்த அவர், சொந்த ஊரான அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்.
உஸ்பெகிஸ்தான் பிரதமர் ஷவ்கட் பிர்ஸியயேவ் துக்கம் அனுசரிப்போரில் தலைமையானவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் அடுத்த அதிபராக வரக்கூடும் என்று யூகங்கள் நிலவுகின்றன.
மத்திய ஆசியாவில் கரிமோஃபின் அரசு மிகவும் மோசமான பதிவுகளை கொண்டிருந்ததாக மனித உரிமை பரப்புரையாளர்கள் தெரிவிக்கின்றனர்