புசல்லாவை பொலிஸில் கைதி தூக்கு



நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
32 வயதான புசல்லாவை பகுதியை சேர்ந்த ஒருவரே பொலிஸ் காவலில் இருந்த நிலையில் தனது மேற்சட்டையால் குழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்தேகநபரின் சடலம் புசல்லாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த நபரின் மரணம் தொடர்பாக புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்