மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) நியூஸிலாந்து செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இணையவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் ஒருவர் இருதரப்பு பேச்சுவார்தையொன்றுக்காக நியூஸிலாந்து செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நியூஸிலாந்து அரச மாளிகையில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

