மற்றுமொரு அடிக்கல்



(சுஹைப்)
அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று - 02. மத்திய வீதியினை கொங்கிறீட் பாதையாக போடுவதற்கான நிதியினை மத்திய அரசின் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கௌரவ.Mr.A.L.தவம் அவர்களின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சபையும், அக்கரைப்பற்று மாநகர சபையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டதன் பயனாக அவ்வீதியைப் போடுவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது.
அதற்கமைய 2016.09.05 ஆம் திகதி திங்கட் கிழமை பி.ப. 04.30 மணியளவில் அக்கரைப்பற்று மத்திய வீதியை கொங்கிறீட் பாதையாக மாற்றுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர் Mr.A.L.தவம் அவர்களும், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் Mr.A.S.M.அஸ்மி அவர்களும், பொறியியலாளர்.Mr.M.I.அப்துல் மஜீட் அவர்களும், அவ்வீதியில் வதியும் பிரமுகர்கள் இருவருமாக இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
அதன் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவ்வீதியில் வதியும் பொது மக்களுமாகப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அவ்வீதியானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸத்தீன் அவர்களின் காலத்தில் போடப்பட்ட வீதியாகும். அவ்வீதி மழை காலங்களில் சேறும் சகதியுமாகக் காணப்படுவதனால் எவரும் செல்ல முடியாததொரு வீதியாகும். இதை ஈஸ்டனின் வீதியும் என்பார்கள்.
அவ்வீதியினைப் போடுவதற்காக பலர் ஒன்றிணைந்து கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடமும் மற்றும் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர் Mr.A.L.தவம் அவர்களிடமும் விடுத்த வேண்டு கோளிற்கிணங்கவும், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அதன் பொறியியலாளர் அவர்களின் பெரு முயற்சியினால் அப்பாதைக்கான அடிக்கல் நடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்ஸா அல்லாஹ் 2016 ஆம் ஆண்டின் அடை மாரி காலத்திற்கு முன்னர் அவ்வீதியானது போடப்பட்டு விட்டால் அப்பாதையினூடாக அக்கரைப்பற்று மாநகர மக்கள் அனைவரும் பயன் பெறலாம் என்ற நல்ல செய்தியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவ்வீதி சம்பந்தமான பல செய்திகளை வீரகேசரிப் பத்திரிகையின் மூலம் அவ்வப்போது வெளியிட்ட ஊடகவியலாளர் Mr.I.L.றிஸான் அவர்களுக்கும், UTV Sri Lanka வின் கிழக்குப் பிராந்திய ஊடகவியலாளர் Mr.சிஹாப்தீன் அவர்களுக்கும், அப்பாதையினைப் போடுவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் முதற்கண் அங்கு வாழும் மக்கள் அவர்களின் மகத்தான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.