ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்றை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று கெஹலியவிடம் கேட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விருந்துபசாரமொன்றுக்கு சென்றால் மதுபானம் அருந்த நேரிடும்.இந்த விபத்து அவ்வளவு பெரிய ஓர் விடயமல்ல.
கொழும்பு கறுவாத்தோட்டம் புனித பிரிஜட் மகளிர் பாடசாலை எதிரில் மகன் ரம்மித் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.யாருக்கும் பெரிய நட்டம் ஏற்படவும் இல்லை.மதில் சுவருக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவும் இல்லை.எமக்கே நட்டம் ஏற்பட்டுள்ளது.
விருந்துபசாரமொன்றுக்கு சென்றால் மது அருந்தப்படும். அருந்தாமல் வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.எனக்கு என்றால் இந்த விபத்து மிகப் பெரிய ஓர் விடயமல்ல என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்கு மேற்கொண்டமை தொடர்பில் ரம்மித் ரம்புக்வெல்லவை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

