எட்டு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு



இலங்கையின் எட்டு மாவட்டங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாக காலநிலை அவதான நிலைய பணிப்பா ளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் இங்கு வீசும் தெனமேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றுதான். இது வீசும்போது வடகிழக்குப் பிராந்திய வெப்பநிலை அதிகரிக்கின்றது. எப்படியிருப்பினும் அங்குமிங்குமாக சிறு தூறல்களைத் தவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று இந்த நாட்களில் பெரிதாக இல்லை. வெப்பநிலை அதிகரிப்பிற்கு அதுதான் காரணம் என்று இவர் கூறியுள்ளார்.
வவுனியாவிலிருந்து மிக அதிகமான வெப்பநிலையாக 37 பாகை சென்டிகிரேட் பதிவு செய்யப்பட்டது.
அம்பாந்தோட்டை பிராந்தியத்தில் 5 பாகையால் வெப்பநிலை எகிறியுள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை , வவுனியா ஆகிய பிரதேசங்களில் வெப்பநிலை 3 பாகையால் அதிகரித்திருப்பதாக இவர் கூறியுள்ளார்.

இவரின் கூற்றின்படி அநுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல் பகுதியில் 2 பாகை வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு;ள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் மாத முடிவில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வீசத் தொடங்கும்வரை இந்த வெப்பநிலை நீடிக்கும் என்றும் இவர் கூறியுள்ளார்