விவாகரத்தை உறுதி செய்த சௌந்தர்யா ரஜினிகாந்த்



ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், விவாகரத்து குறித்த செய்தியினை தற்போது, சௌந்தர்யா உறுதி செய்துள்ளார்.
2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்த சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வேத் என்கிற மகன் ஒருவர் உள்ளார்.
சமீபகாலமாக, சௌந்தர்யா – அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருவதால், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சௌந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனால் கொலிங்வூட்டில்  பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இத்தகவலை சௌந்தர்யா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
“என் திருமணம் தொடர்பான செய்திகள் உண்மைதான். கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்துவாழ்கிறோம். விவாகரத்து குறித்து பேசிவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
மேலும் தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.