அக்கரைப்பற்று FBC முன்றலில் திருடியவர் அகப்பட்டார்




-எஸ்.ரி.ஜமால்டீன்-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி தன்வசம் வைத்திருந்த 38 வயதுடைய நபரொருவரை அக்கரைப்பற்ற பொலிசார் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்த சந்தேக நபரை விசாரணை செய்த பொலிசார் இன்று (12) காலை துவிச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர். சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-
அம்பாறை அக்கரைப்பற்று -3ஆம்பிரிவில் வசிக்கும் ஆதம் லெப்பை முஹம்மட் முர்ஸித் என்பவரின் துவிச்சக்கர வண்டியை அவரது சகோதரார் முஹம்மட் சுஹைப் என்பவர் சனிக்கிழமை (10) இரவு 10 மணியளவில் எடுத்துக் கொண்டு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எப்.பி.சி விற்பனை நிலையத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.
துவிச்சக்கர வண்டியை விற்பனை நிலையத்துக்கு முன்னால் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த போது துவிச்சக்கர வண்டி இருக்கவில்லை. இவ்விடயத்தை சுஹைப் விற்பனை நிலைய உரிமையாளரிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார்.
விற்பனை நிலைய  விற்பனை நிலையத்தின் முன்னால் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமரா பதிவைக் கொண்டு குறித்த நபரை மறுநாள் ஞாயிற்று கிழமை அடையாளம் கண்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் மீண்டும் விற்பனை நிலையத்துக்கு முன்னால் வருகை தந்ததை அவதானித்த விற்பனை நிலைய முகாமையாளர், பொது மக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து, பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரியப்படுத்தியதையடுத்துடன் சந்தேக நபரையும் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு CCTV பேழையையும்
பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் துவிச்சக்கர வண்டி உரிமையாளரின் முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துள்ளனர். சந்தேக நபர் அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தில்  தற்காலிகமாக   வருபவர் எனவும் தெரிவித்தனர்.