(SUHAIB)
2016.10.24 ஆம் திகதி திங்கள் கிழமை பி.ப. 3.00 மணியிலிருந்து பெய்த இடி மின்னலுடன் கூடிய மழை 4.30 மணி வரையில் தொடர்ச்சியாக இடைவிடாது பெய்தது.
அம்மழையினால் அக்கரைப்பற்று - 06 KVS வீதி, அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் உள்ள வீதி, ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் இன்று ஏற்பட்ட வெள்ளத்தினை பலராலும் அவதானிக்க முடிகின்றது.
அக்கரைப்பற்று - 06 ஆம் குறிச்சியிலுள்ள இம்மூன்று வீதிகளும் 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் I Road திட்டத்தின் கீழ் காபட் வீதியாக மாற்றம் செய்யப்படவிருக்கின்றது.
அவ்வீதிகளை செய்வதற்குத் தேவையான பூர்வாங்க மதீப்பீடுகள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

