(சிவம்)
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 143 ஆவது ஆண்டு கல்லூரி தினக் கொண்டாட்டத்தையொட்டிய 'மைக் வோக்' நடைபவனி இன்று சனிக்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
பாடசாலையானது கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றியீட்டிய துறைசார் கிண்ணங்கள், வெற்றிக் கேடயங்களைச் சுமந்த வாகன ஊர்திகள் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மத்திய வீதி, திருமலை வீதி, பார்வீதி மற்றுட' அரசடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று பாடசாலையை நோக்கித் திரும்பியது.
ஊர்வலத்திற்கு முன்பாக பாடசாலையின் அதிபர்கள் மற்றும் கல்லூரியின் வளர்ச்சிக்கு துறைசார் உதவிகளை வழங்கியோர் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் கௌரவிக்கப்பட்டனர்.
