உள்ளூராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் -2016




உள்ளூராட்சி மாதம்-2016 மற்றும் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமானது 2016.10.31ம் திகதியாகிய இன்று ஏறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு.க.பேரின்பராசா அவர்களின் தலைமையின் கீழ் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்னால் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.க.சித்திரவேல் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்;, அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு.உ.உதயசிறீதர், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் எந்திரி.திரு.அ.பிரசாந்தன் மாகாண நீர்பாசனப் பொறியியலாளர்; மற்றும் திரு.அன்ரனி ஜோர்ஜ் ஆனந்தராஜா கணக்காளர் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் ஆகியோரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர். அத்துடன் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பிரதேச சபை மூலம் மக்களுக்கு ஆற்றப்படும் சேவைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இவ் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும்; விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் மட்/ கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களால் வீதி நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.