மட்டு முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு நவம்பர் 7 வரை விளக்கமறியல்



விபச்சார விடுதி நாடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட நான்குபேர் எதிர்வரும் 07.11.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் அந்த விடுதியில் காணப்பட்ட இரண்டு பெண்கள் ஒரு ஆண் அடங்களாக நான்கு பேரை மட்டக்களப்பு பொலிசார் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது இவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 07.11.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மட்டக்களப்பு மாநாகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனினால் நடாத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள அவரின் வீட்டை அண்டியதான விடுதியை மட்டக்களப்பு பொலிசார் முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகையின் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட மட்டக்களப்பு மாநாகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
இவர்களை விசாரணை செய்த பொலிசார் இவர்களில் மூவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன் முன்னாள் மேயர் மற்றும் அங்கு இருந்த இரண்டு பெண்கள் அந்த விடுதியின் முகாமையாளர் ஆகிய நாலுபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.