'உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்'



“எமது இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட அனைவரும் பொறுமைகாக்க வேண்டுகின்றேன். எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.