(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடுக் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதனால் அவ் வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டின் உரிமையாளருக்கும் மற்றொருவருக்குமிடையில் கடந்த சனிக்கிழமை மாலை, ஏற்பட்ட மோதலையடுத்து வீட்டின் உரிமையாளர் காயமடைந்து, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இந்த மோதலின் எதிரொலியாகவே குறித்த வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

