ஆவா குழுவை பிடிப்போம்




"ஆவா" என்ற பெயருடைய குழுவினால் வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார். 


இது தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வு தகவல்களின் பிரகாரம் சந்தேகநபர்களை கைது செய்தற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 



யாழ் மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மீனவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குவர்தன இன்று பாராளுமன்ற அமர்வின் போது எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.