இன்னும் இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு



பதுளை பிரதேசத்திலுள்ள 5பாடசாலைகள்  ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் சுஜாதா பெண்கள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைக​ளே நாளைய தினம் மூடப்படவுள்ளன.
பதுளை நகரத்தில் உள்ள குப்பை மலைகள் இரண்டு, நேற்று முழுவதும் தீப்பற்றி எரிந்தமையால் நகரம் முழுவதும் புகையால் சூழ்ந்துள்ளது. அதனையடுத்து, இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை விஹாரமகா தேவி பெண்கள் பாடசாலை, தர்மதூத மகா வித்தியாலயம்,  ஊவா மகா வித்தியலாயம், அல்அதான் வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இன்று காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (17) கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.