உலக குடியிருப்பு தினம் பொலநருவையில் ஜனாதிபதி தலைமையில்





(அஷ்ரப் ஏ சமத்)

1985ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள்  சபையிடம் சமா்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு  ஏற்ப 1986ஆம் ஆண்டில் இருந்து அனைத்து வருடங்களிலும் அக்டோபா் மாதம் முதலாவது திங்கட் கிழமை தினத்தினை உலக குடியிருப்பு (ஹெபிட்டாட் ) தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் படி 2016ஆம் ஆண்டில் அக்டோபா் மாதம் 03ஆம் திகதி ஜக்கிய நாடுகளின் மனித குடியிருப்பு அமையம் உலக குடியிருப்பு தினத்துடன் 30 ஆண்டுகள் புர்த்தியடைகின்றது.இவ் ஆண்டின் தொனிப்பொருள் ”வீடமைப்புக்கு முதலிடம்” எனும் தலைப்பின் கீழ் கொண்டாடுகின்றது. 

இலங்கையில் 30வது ஆண்டு  உலக குடியிருப்பு தினத்தினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித்பிரேமதாச தலைமையில்  அக்டோபா் 03ஆம் திகதி  பொலநறுவையில் திம்புலாகல ”சுகலாதேவி மாதிரிக் கிராமத்த்தில் நடைபெறுகின்றது.  அன்றைய தினம் இம் மாதிரிக் கிராமம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்படும்.  அத்துடன் இப் பிரதேசத்தில் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளான ஏழை எளிய 250 குடும்பங்களுக்கு  வீடமைப்பு உதவிகளை வழங்கள், வீடுகளை திருத்தியமைப்பதற்காக சீமெந்து உதவிகள் வழங்கப்படும்.” செமட்டசெவன” மற்றும் ஷில்பசவிய வேலைத்திட்டத்தின் கீழ்  கட்டிட நிர்மாணத் தொழிலில் பயிற்சியளிப்பதற்காக 100க்கும் மேற்பட் ட இளைஞா்கள் யுவதிகளுக்கு   மேசன், தச்சுவேலைகள்  உ பரணங்கள் பொதிகளும்   வழங்கி வைக்கப்படும்.  அத்துடன் இப்பிரதேசத்தில்  குடிநீரின்றி வரட்சியினால் பாதிக்கப்படுவதனால் வுவுசா் மூலம் நீரை வழங்குவதற்கான திட்டமொன்றினை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினல் செயல்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் உலக குடியிருப்பு பற்றி மாணவா்களின் கல்வி அறிவினை வளா்க்கும் நோக்கில் பாடாசலை மட்டத்தில் சிர்திரம், கட்டுரை பேச்சு மற்றும் நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவா்களுக்கு ஜனாதிபதி விருதும் பணப்பரிசில்களும் ஜனாதிபதியினால்   வழங்கி வைக்கப்படும்.. 

ஜக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வருகின்ற அநேகமான நாடுகளில் வருகின்ற  அநேகமான நாடுகளில் இன்று உலக மக்கள் தொகையில்  நான்கிலொரு பகுதியினரே நிலையான சொந்த வீடுகளில் வாழ்கின்றனா்.  ஏனையோா் வாடகை வீடுகளிலும், குடிசைகளிலும்  சேரி வீடு, பஸ் நிலையங்களிலும், கடலோரங்களிலும், லயன் அறைகளிலும் தற்காலிக கூடாரங்களிலும்  வனஜீவராசிகளின் காடுகளிலும் வாழ்ந்து வருகின்றனா். 

ஜக்கிய நாடுகள் உலக குடியிருப்பு அமையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் வறுமை, போதியளவு, வீடுகள், இல்லாமை உட்பட சுற்றாடல் பிரச்சினைகளாலும் பூகோலரீதியில் ஏற்படும் காலநிலை மாற்றம் இயற்கை அனா்த்தம், நாடுகளில் நடைபெறுகின்ற யுத்தம் போன்றவற்றினாலும் மக்கள் தத்தமது குடியிருப்புக்களை இழந்து வருகின்றனா்.  
தற்பொழுது கொழும்பு நகரத்தில்  மட்டும் 75 ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் மனித குடியிருப்புக்கு பொருத்தமற்ற வீடுகளில் வாழ்ந்து வருகின்றனா்.  தற்பொழுது கொழும்பு நகரத்தில் 52வீதம்  மக்கள் வீட்டுரிமையற்றவா்களாக வாழ்கின்றனா். 2020 ஆம் ஆண்டளவில் உலகின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கு மேற்பட்டோா்  நகரங்களிலேயே  வாழ்வாா்களென எதிா்பாா்க்கப்படுகின்றது.  இலங்கையில் இந்த தொகை 2030ஆம் வருடமளவில்  65 வீதமாக அதிகரிக்க இடமுண்டு. 

இலங்கையில் 55ஆயிரத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்ட 10 நகரங்களில் 8 கொழும்பை தலைநகரமாகக் கொண்ட மேல் மாகாணத்திலேயே உள்ளன. மேலும் பகல் நேரங்களில் கொழும்பு மாநகரத்தில்  வதிபவா்களின் எண்ணிக்கை    15 இலட்சம்  என நகர அதிகார சபை கணக்கிட்டுள்ளது. 
மேல் மாகாண நகரங்களில் வாழும் மக்கள்  சமுக அபிவிருத்திக்குத் தேவையான  வசதிகளைப் பெற பல இன்னல்களை எதிா்நோக்க வேண்டியுள்ளது. இம் மக்கள் தமக்குத் தேவையான உடை, உணவு, உறையுள், வசதிகளையும்  மற்றும்  பொதுவசதிகாளன நீர் வழங்கல், வடிகலாலமைப்பு போன்றவற்றினைப் பெ மிகவும் முயலவேண்டியுள்ளது. 
பொருளாதாரத்தினை ஆதாரமாகக் கொண்டுள்ள வர்த்தக தொழில் வளா்ச்சியுடன் நகரங்களும் வளா்ச்சி பெறுகின்றன. தற்சமயம் குற்றச் செயல்கள் தாக்கங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளன.  நகா் வாழ் மக்கள் ஆண், பெண்  குழந்தைகள் முதியோா்கள் பணம்படைத்தவா்கள், வறியவா்கள் என்ற வேறுபாடின்றி இத் தாக்குதல் வன்முறைகளுக்குப் பயந்து வாழ வேண்டியுள்ளது. 

 இலங்கையில் வீடமைப்புத்துறையினை  மேம்படுத்துவதற்காக  தனியாா் நிர்மாணக் கம்பணிகள்,  அரச , தனியாா்  வர்த்தக  வங்கிகளின்     வீடமைப்புக் கடன் திட்டங்கள்,  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபபையின்   பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள்,   பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான    கீழ் உள்ள    கொழும்பில் 75ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம், , நகர அபிவிருத்தி மற்றும் மொகா பொலிஸ் அமைச்சின்    சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்றி  தொடா்மாடி வீடமைப்புத்திட்டங்கள்,    மீனவ  சமுகத்திற்கான  வீடமைப்பு, சமுா்த்தி வீடமைப்பு , வனஜீவராசிகள் அமைச்சினால் -  யானையினால்   தாக்குதலுக்கு உல்லாகும் வீடுகள் மீள   வீடமைப்பு, புனா் வாழ்வு புனரமைப்பு அமைச்சின் கீழ் அமுல்படுத்து வீடமைப்புத்திட்டங்கள்    அனா்த்த அமைச்சின் வீடமைப்புத்திட்டம  என பல்வேறு அமைச்சுக்கள் இணைந்து    இலங்கையில் பல வீடமைப்புத்திட்டங்களை    நிர்மாணிக்கும்   திட்டங்களை இநத அரசினால்  முன்னெடுத்து வருகின்றன. 



1985ஆம் ஆண்டின் மேற்கிந்திய தீவில் ஜமேக்கா அரசின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற ஜக்கிய நாடுகளின் மனித குடியிருப்பு  ஆணைக்குழுவிற்கு இலங்கை பிரதம மந்திரியாக பதவி வகித்த ரணசிங்க  பிரேமாதாசவினால் சமா்ப்பிக்கப்பட்ட ஒரு கருத்தானது இந்த உலக குடியிருப்பு தினமாகும். ஜக்கிய நாடுகள்  சபையினால் பிரகடனப்படுத்த காரணமாய் அமைந்தது.  அன்று தொடக்கம் கடந்த 30 வருடங்களாக  ஜக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளுடன் ஒவ்வொரு வருடமும் உலக குடியிருப்பு தினம் இலங்கை நாடு தழுவிய ரீதியில் இடம்பெறுகின்றது.  மூன்று தசாப்பதங்களுக்குப் பிறகு இவ்வருட உலக குடியிருப்பு தினம் வீடமைப்புக்கு முன்னுரிமை வழங்கியிருப்பதன் மூலம் ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றம் அதன் பயனாளிகளுக்கு வீடமைப்பில் காணப்படும் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது. 

வீடமை்பபு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித்பிரேமதாசாவின்  அறிவுறுத்தலின்படி வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் வழிகாட்டலின்  கீழ்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உலக குடியிருப்பு தினத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தினை நாடு தழுவிய ரீதியில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  கொண்டாடுகின்றது. அக்டோபா்  03 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான கால கட்டத்தில் குடியிருப்பு வாரம் ” என அரசு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வாரத்தின் நாட்டின் சகல மாவட்டங்களிலும்  பல்வேறுவகையான வீடமைப்ப மற்றும் குடியிருப்பு  நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்கள்  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.