(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கணங்குளமடு காட்டுப் பகுதியில் நிலத்தில் புதைத்திருந்த நிலையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ-56 ரக துப்பாக்கிகள் இரண்டும், அவற்றுக்கான மகஸின்கள் இரண்டும் தலா 30 ரவைகள் அடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சனிக்கிழமை காலை இந்தத் துப்பாக்கிகளையும் ரவைகள் நிரம்பிய மகஸின்களையும் மீட்டனர்.
உரப்பைகளில் சுற்றப்பட்டிருந்த இவை பழைய ஆயுதங்கள்ய என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

