”மின்வெட்டு இனி இல்லையாம்” நம்புங்கள் மக்காள்



நாடு முழுவதும் வலயங்களாகப் பிரித்து அமுல்படுத்தப்பட்டிருந்த மின்சார துண்டிப்பை, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கைவிடுவதற்கு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பரிந்துரைக்கமைய, மின்சார துண்டிப்பு உடனடியாகக் கைவிடப்பட்டுள்ளது.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்க இயந்திரம் தற்போது திருத்தப்பட்டு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.