சுன்னாகத்தில் வாள் வெட்டு - சிவில் உடையில் இருந்த இரு பொலிஸார் படுகாயம்




யாழ் - சுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் சுன்னாகம் நகருக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவொன்று, சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்துள்ளனர். 

இவர்கள் அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை வெட்ட முயன்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸாரையும் அவர்கள் வெட்டியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் இரு பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.