அம்பாறை. சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுகாதாரத்துறைக்கான வளப் பங்கீடுகள் முறையாக மேற்கொள்ளப்படாது பாராபட்சம் காட்டப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதேஇ அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 'மத்திய அரசாங்கத்தினதும் கிழக்கு மாகாண சபையினதும் சுகாதாரத்துறை சார்ந்த வளப்பங்கீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு பாராபட்சம் காட்டப்படுகின்றமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஏனைய பிரதேசங்களில் சுகாதாரத்துறைக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள்இ சம்மாந்துறைப் பிரதேசத்திலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

