பாடகர் சிலி விளக்கமறியலில்



ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிலி (Chillie) என அழைக்கப்படும் பாடகர் திலங்க விதுஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெலவத்தை, விஜிதபுர பகுதியில் மரணச்சடங்கு இடம்பெற்ற வீடொன்றிற்கு அருகிலுள்ள வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தால், கடந்த வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடகர் சிலியின் தாக்குதலில் காயமடைந்த 57 வயதான நபர் தலங்கம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.