பங்களாதேஷ் வரலாற்று வெற்றி



டாக்­காவில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் கிரிக் கெட் போட்­டியின் மூன்றாம் நாள் ஆட்­டத்தின் கடைசிப் பகு­தியில் 22.3 ஓவர்­களில் பத்து விக்­கெட்­களை சரித்த பங்­க­ளாதேஷ், இங்­கி­லாந்­துக்கு எதி­ராக முத­லா­வது டெஸ்ட் வெற்­றியைப் பதிவு செய்து வர­லாறு படைத்­தது.
2003 இலி­ருந்து இங்­கி­லாந்­துக்கு எதி­ரான 9 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் தோல்வியடைந்­தி­ருந்த பங்­க­ளாதேஷ் பத்­தா­வது டெஸ்டில் முதல் வெற்­றியை சுவைத்­தது.
பத்­தொன்­பது வய­து­டைய மெஹெதி ஹசன் மிராஸ் தனது இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் மிகத் துல்­லி­ய­மாக பந்­து­வீசி இங்­கி­லாந்தின் 12 விக்­கெட்­களை மொத்­த­மாக வீழ்த்த பங்­க­ளாதேஷ் 108 ஓட்­டங்­களால் அபார வெற்­றி­யீட்­டி­யது.
அத்­துடன் இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரையும் ஒன்­றுக்கு ஒன்று என பங்­க­ளாதேஷ் சமப்­ப­டுத்­திக் ­கொண்­டது.
இப்போட்­டியில் இரண்­டரை தினங்கள் மீத­மி­ருக்க, 273 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து, பகல் போசன இடை­வே­ளைக்கு சற்று பின்னர் இருந்து தேநீர் இடை­வே­ளை ­வரை விக்கெட் இழப்­பின்றி 100 ஓட்­டங்­களைப் பெற்று ஸ்திர­மான நிலையில் இருந்­தது.
ஆனால், அக்­டோபர் 25 ஆம் திகதி தனது 19 பிறந்த நாளைக் கொண்­டா­டிய இளம் சுழல் பந்­து­வீச்­சாளர் மெஹெதி ஹசன் மிராஸ் துல்­லி­ய­மாக பந்­து­ வீசி 6 விக்­கெட்­களைக் கைப்­பற்ற 64 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் இங்­கி­லாந்து தனது பத்து விக்­கெட்­க­ளையும் இழந்து தோல்­வியைத் தழு­வி­யது. மறு­மு­னையில் ஷக்கிப் அல் ஹசன் 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். இதில் 3 விக்கெட்­களை 4 பந்­து­களில் அவர் வீழ்த்­தி­யி­ருந்தார்.
அலஸ்­டெயார் குக், பென் டுக்கெட் ஆகிய இரண்டு ஆரம்ப வீரர்­களும் அரைச் சதங்­களைப் பெற்­ற­துடன் மத்­தி­ய­வ­ரி­சையில் பென் ஸ்டோக்ஸ் ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்­தினார்.
வெள்­ளி­யன்று ஆரம்ப ­மான இப்போட்­டியில் கவ­னக்­கு­றை­வான துடுப்­பாட் டம் கார­ண­மாக இரண்டு அணி­களும் தத்­த­மது முதல் இன்­னிங்ஸ்­களில் 250 ஓட்­டங்­களைப் பெறத்­த­வ­றின.
பங்­க­ளாதேஷ் சார்பாக தமிம் இக்பால் சதம் குவிக்க, மொமினுல் ஹக் அரைச் சதம் பெற்றார். வேறு எவரும் முதல் இன்­னிங்ஸில் பிர­கா­சிக்­க ­வில்லை. இங்­கி­லாந்து சார்பாக ஜோ ரூட், க்றிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய மூவரே முதல் இன்­னிங்ஸில் 40 க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றனர்.
இரண்­டா­வது இன்­னிங்ஸில் ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்­திய பங்­க­ளாதேஷ் 296 ஓட்­டங்­களைப் பெற்­றது.
போட்­டியின் மூன்றாம் நாளான நேற்றுக் காலை 3 விக்கெட் இழப்­புக்கு 152 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து தனது இரண்­டா­வது இன்­னிங்ஸைத் தொடர்ந்த பங்­க­ளாதேஷ், எஞ்­சிய 7 விக்­கெட்­களை 144 மேல­திக ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது. நான்கு துடுப்­பாட்ட வீரர்கள் 40 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றனர்.
எண்­ணிக்கை சுருக்கம்
பங்­க­ளாதேஷ் 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 220 (தமிம் இக்பால் 104, மொமினுல் ஹக் 66, மொயீன் அலி 57–5 விக்.)
இங்­கி­லாந்து 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 244 (ஜோ ரூட் 56, க்றிஸ் வோக்ஸ் 46, ஆதில் ராஷித் 44 ஆ.இ., மெஹெதி ஹசன் மிராஸ் 82–6 விக்.)
பங்­க­ளாதேஷ் 2ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 296 (இம்ருள் கயேஸ் 78, மஹ்­மு­துல்லாஹ் 47, ஷக்கிப் அல் ஹசன் 4ஹ, தமிம் இக்பால் 40, ஆதில் ராஷித் 52–4 விக்., பென் ஸ்டோக்ஸ் 52–3 விக்.)
இங்­கி­லாந்து 2வது இன்: சகலரும் ஆட்டமிழந்து 164 (அலஸ்டெயார் குக் 59, பென் டுக்கெட் 56, பென் ஸ்டோக்ஸ் 25, மெஹெதி ஹசன் மிராஸ் 77–6 விக்., ஷக்கிப் அல் ஹசன் 49–4 விக்.).
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் மெஹெதி ஹசன் மிராஸ் வென்றெடுத்தார்.