கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த கொழும்பு சம்மன்கோட்டை ஜும்மா பள்ளிவாசல் தலைவரும், காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும், காத்தான்குடி மக்களின் மதிப்புக்குரிய “ஷைஹுல் பலாஹ்” அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்கள் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து வபாத்தாஹியுள்ளார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் தென்னிந்தியா அதிராம் பட்டிணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வபாத்தாகும்போது இவருக்கு வயது 84 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 13.10.2016 வியாழக்கிழமை நாளை பிற்பகல் 4:30 மணிக்கு காத்தான்குடி 5 ஜாமிஉல்லாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

