விறகு எடுக்கச் சென்றவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மரணம்




விறகு எடுக்கச் சென்றவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மரணம் திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட காட்டுப் பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் நேற்று புதன்கிழமை(26) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட அவர் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-மிகிந்தபுரம் 02ம் ஒழுங்கையில் வசித்து வரும் சாதிகீன் அப்துல் கபூர் (69 வயது) என தெரியவந்துள்ளது. 

குறித்த நபரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையயில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை உப்புவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.