இந்திய அணியின் ”ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரம்” என அழைக்கப்படும் விராட் கோலியைப் போன்றே பாகிஸ்தானில் பெண் ஒருவர் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டில் பல சாதனைகளைத் தொடர்ந்து புரிந்த வண்ணம் உள்ளார் கோலி.
இதனால், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கிரிக்கெட் இரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வீரராக அவர் உள்ளார்.
விளையாட்டில் மட்டுமல்லாமல் தோற்றம் மற்றும் ஸ்டைல்களிலும் விராட் கோலியை அவரது இரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
அண்மையில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி இருந்ததைக் கண்டு அவரது ரசிகர்கள்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், விராட் கோலி போல் தோற்றத்தைக் கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அலி இமான் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

