16 வயது மகள் முன்னிலையில் 16 வயது குறைந்த பெண்ணை மணம் முடித்த பிரபலம்(VIDEO)



நடிகர் திலீப் தனது 16 வயது மகள் முன்னிலையில் தன்னைவிட 16 வயது சிறியவரான நடிகை காவ்யா மாதவனை இன்று மணந்தார். மலையாள நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனை இன்று கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மனைவி மஞ்சுவை விவாகரத்து செய்த திலீப்பும், கணவரை பிரிந்த காவ்யாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று மலையாள திரையுலகம் எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில் தான் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணம்கொச்சியில் உள்ள வேதாந்தா ஹோட்டலில் குடும்பத்தார், சில நண்பர்கள் முன்னிலையில் இன்று திலீப், காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது.