373 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது சிம்பாபே



இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 373 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

அந்த அணி சார்பாக ஏ.ஜி கிரேமர் 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

அதன்படி இலங்கை அணி 164 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பாக குஷல் ஜனித் பெரோ 110 ஓட்டங்கள், உபுல் தரங்க 110 ஓட்டங்கள் மற்றும் கௌஷால் சில்வா 94 ஓட்டங்களையும் பெற்றனர்.