சுமணரத்ன தேரருக்கு எதிராக ஊர்வலம்



(விசேட நிருபர்)
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அட்டூழியங்களை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு செங்கலடியில் இந்து மதகுருமாரின் ஊர்வலமொன்று நேற்று    நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து மத குருக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு மங்களாராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரினால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் அட்டூழியங்களை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
செங்கலடி பல நோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்திற்கு முன்னாள் ஆரம்பமான இந்த ஊர்வலம் செங்கலடி சந்தி வரை சென்று நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் இந்து மத குருக்கள் கலந்து கொண்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், எஸ்.விளாழேந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் அட்டூழியங்களை நிறுத்தப்படல் வேண்டும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டன.